
இந்திய தொழில்நுட்ப சேவைகள் மற்றும் அவற்றை நிர்வகிக்கும் அமைச்சகங்கள்
செய்தி முன்னோட்டம்
புதிய தொலைத்தொடர்பு சட்ட வரைவானது மக்களவையில் சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சட்ட வரைவில் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் அவை சார்ந்த விஷயங்களுக்கான ஒழுங்குமுறை குறித்த விதிமுறைகள் புதிதாக வகுக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த சில பத்தாண்டுகளில் பல்வேறு புதிய தொழில்நுட்ப சேவைகள் மற்றும் நிறுவனங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன. முன்னதாக அவற்றுக்கென தனியே சட்டதிட்டங்கள் எதுவும் இல்லை.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அப்படி எந்த சட்டதிட்டங்களுக்குள்ளும் அடங்காத சில சேவைகள் மற்றும் நிறுவனங்களுக்கான புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் மத்திய அரசு தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது.
அப்படி, எந்தெந்த புதிய தொழில்நுட்ப சேவைகள் மற்றும் நிறுவனங்கள் இந்தியாவின் எந்தெந்த அமைச்சங்களின் மற்றும் சட்டதிட்டங்களின் கீழ் வருகின்றன போன்ற தகவல்கள் அடங்கிய தொகுப்பிது.
வணிகம்
புதிய தொழில்நுட்ப சேவைகள் மற்றும் நிறுவனங்கள்:
நம்முடைய தினசரி பயன்பாடுகளில் ஒன்றாக ஆகிப்போன OTT சேவைகளை எந்த அமைச்சகம் நிர்வகிக்கிறது? மேலும் எந்த சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு அவை இயங்குகின்றன?
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனிலைவ் உள்ளிட்டவை OTT சேவைகள் எனப்படுகின்றன. இந்த சேவைகள் மற்றும் நிறுவனங்களின் இயக்கத்திற்கான விதிமுறைகள், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வெளியிடப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2021-ன் கீழ் வழங்கப்பட்டிருக்கிறது.
இதுதவிர, OTT-யில் உள்ளடக்க ஒழுங்குமுறைகளை, தேசப் பாதுகாப்பு, பொதுமக்கள் நலன் மற்றும் ஒழுக்கம் சார்ந்த சில பிரிவுகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகமும் கண்காணிக்கிறது.
இந்தியா
நிதிநுட்ப (Fintech) சேவைகள் மற்றும் இணைய வர்த்தகம்:
நிதி சார்ந்த தொழில்நுட்ப சேவைகள் மற்றும் நிறுவனங்களுக்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை ரிசர்வ் வங்கியும், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் வழங்குகின்றன.
நிதிநுட்ப பிரிவை ஒழுங்குபடுத்துவதற்கு, இந்த ஒழுங்குமுறை ஆணையங்களுக்குத் தேவையான சில வழிமுறைகளை மட்டும் வழிகாட்டுதல்களை மட்டும் மத்திய நிதி அமைச்சகம் அவ்வப்போது வழங்கி வருகிறது.
இணைய வர்த்தக சேவை நிறுவனங்களான ஃப்ளப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்டவற்றுக்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை, மத்திய வர்த்தக மற்றும் தொழில்நுறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை வழங்கி வருகிறது.
இவற்றைக் கடந்து தொலைத்தொடர்பு சேவைகள் தொடர்பான விதிமுறைகள் மட்டும் வழங்கும் பொருட்டு புதிய தொலைத்தொடர்புச் சட்ட வரைவு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.