'நிஜ்ஜார் கொலை தொடர்பான ஆதாரம் இன்னும் காட்டப்படவில்லை': கனடாவுக்கான இந்திய தூதர்
செய்தி முன்னோட்டம்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை "இந்திய அதிகாரிகள்" கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையிலான ஆதாரத்தை காட்டுமாறு கனடாவின் உயர்மட்ட இந்திய தூதர் கோரியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து, காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து, அவரது கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனட அரசாங்கம் பெரும் குற்றசாட்டை முன்வைத்தது.
இதனால், இந்திய-கனட உறவுகள் பெரிதாக சேதமடைந்துள்ளன.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பான ஆதாரத்தை கனடா இன்னும் காட்டவில்லை என்று கனடாவுக்கான உயர்மட்ட இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா நேற்று தெரிவித்திருக்கிறார்.
பிபிவெஜ்ஜிப்ளா
'உயர்மட்ட கனேடிய அதிகாரி இந்த வழக்கை திசை திரும்பிவிட்டார்': சஞ்சய் குமார் வர்மா
"விசாரணையில் அவர்களுக்கு உதவ இந்த வழக்கில் குறிப்பிட்ட அல்லது பொருத்தமான ஆதாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆதாரம் எங்கே? விசாரணையின் முடிவு எங்கே? நான் ஒருபடி மேலே சென்று இப்போது விசாரணை ஏற்கனவே கறைபடிந்துவிட்டது என்று கூறுவேன். ஏனென்றால், அந்த கொலைக்கு பின்னணியில் இந்தியா அல்லது இந்திய ஏஜெண்டுகள் இருக்கிறார்கள் என்று உயர் மட்டத்தில் உள்ள ஒருவரே கூறி இந்த வழக்கை திசை திரும்பியுள்ளார்." என்று சஞ்சய் குமார் வர்மா நேற்று கூறி இருக்கிறார்.
அது எந்த உயர்மட்ட அதிகாரி என்பதை சஞ்சய் குமார் வர்மா கூறவில்லை.
இதற்கிடையில், "இந்திய அதிகாரிகளுக்கு எதிரான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை கனேடிய பாதுகாப்பு முகமைகள் விசாரித்து வருகின்றனர்" என்று அந்நாட்டு பிரதமர் ட்ரூடோ சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.