ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது?
செய்தி முன்னோட்டம்
நேற்று(ஜூலை 31) காலை, மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் ரயில் நிலையம் அருகே, ரயிலில் பயணித்த பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேரை சுட்டுக் கொன்றார்.
தனது மூத்த அதிகாரியை சுட்டு கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ரயில்வே காவலர் சேத்தன் சிங், சம்பவம் நடப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தனது சக ஊழியர்களிடம் கூறி இருக்கிறார்.
அதனால், சேத்தன் சிங் ரயிலை விட்டு இறங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், அவரது மூத்த அதிகாரி திகாரம் மீனா, ஷிப்டை முடித்துவிட்டு இறங்கும்படி கேட்டு கொண்டார்.
ஆனால், தனது மூத்த அதிகாரிகளின் பேச்சை கேட்டுக்கும் நிலையில் சேத்தன் சிங் இல்லை.
டி
'நான் கொடுக்கவில்லை என்றதும் என் கழுத்தை பிடித்து நெரித்தார்': கான்ஸ்டபிள் கன்ஷியாம்
ரயில்வே பாதுகாப்புப்படை கான்ஸ்டபிள் கன்ஷியாம் ஆச்சார்யா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் திகாரம் மீனா(58), கான்ஸ்டபிள் நரேந்திர பர்மர்(58), சேத்தன் சிங்(33) ஆகியோர் சம்பவத்தின் போது பணியில் இருந்தனர்.
துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விவரித்த கன்ஷியாம் ஆச்சார்யா, "சேத்தன் சிங்க்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரிடம் இருந்த துப்பாக்கியை வாங்கிவிட்டு, அவரை ஒரு ரயில் படுக்கையில் படுக்க சொல்லி இருந்தார் திகாரம் மீனா. ஆனால், சேத்தன் அதிக நேரம் தூங்கவில்லை. கொஞ்ச நேரத்திலேயே துப்பாக்கியை கொடுக்கும் படி என்னிடம் கேட்டார். நான் கொடுக்கவில்லை என்றதும் என் கழுத்தை பிடித்து நெரித்தார்." என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு ஏற்பட்ட வாக்கு வாதத்தில், சேத்தன் தனது மூத்த அதிகாரி திகாரம்-மீனா மற்றும் மூன்று பயணிகளை சுட்டு கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.