NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? எந்த அடிப்படையில் அது ஏற்றப்படுகிறது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? எந்த அடிப்படையில் அது ஏற்றப்படுகிறது?
    பகலில் ஏற்றப்படும் கூண்டு(கருப்பு நிறத்தில்), இரவில் விளக்குகளில் ஏற்றப்படும் கூண்டு.(வெள்ளை மற்றும் சிவப்பில்).

    புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? எந்த அடிப்படையில் அது ஏற்றப்படுகிறது?

    எழுதியவர் Srinath r
    Dec 03, 2023
    12:33 pm

    செய்தி முன்னோட்டம்

    புயல் எச்சரிக்கை கூண்டு என்பது மீனவர்களுக்கு புயல் குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில், துறைமுகங்களில் ஏற்றப்படுகிறது.

    புயல் உருவாகும் சூழல் முதல் அது ஏற்படுத்தப் போகும் பாதிப்புகள் வரை தெரியப்படுத்த, 11 வெவ்வேறு வகையான கூண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

    பகல் நேரத்தில் மூங்கில் தட்டையால் ஏற்றப்படும் கூண்டுகள், இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் ஏற்றப்படுகிறது.

    முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

    துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும் பொழுது புயல் உருவாகும் வானிலை ஏற்பட்டுள்ளதாக பொருள். துறைமுகங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அதிககாற்று வீசும்.

    இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

    இது புயல் உருவாகியுள்ளது என்பதை எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இது ஏற்றப்பட்டுவிட்டால் துறைமுகங்களை விட்டு கப்பல்கள் வெளியேற வேண்டும்.

    3rd card

    மூன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏன் ஏற்றப்படுகிறது?

    மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

    திடீர் காற்றோடு பெய்யும் மழையால் துறைமுகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் என்பதை எச்சரிக்க, மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது.

    நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

    வரவிருக்கும் புயல் உள்ளூர் மக்களுக்கும், துறைமுகங்களில் உள்ள கப்பல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டால், நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு பயன்படுத்தப்படுகிறது.

    ஐந்தாம் மற்றும் ஆறாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

    ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்திற்கு இடது பக்கமாக புயல் கரையை கடக்கும் என்பது பொருள்.

    அதேபோல், புயல் துறைமுகத்திற்கு வலது பக்கமாக கரையைக் கடக்கும் போது ஆறாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது.

    4t card

    ஒன்பதாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால் என்ன பொருள்?

    ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

    துறைமுகத்தின் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையை கடக்கும் போது, ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது.

    எட்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

    வலுப்பெற்ற புயல், தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுக்கும் போது, எட்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். மேலும், வலுப்பெற்ற புயல் துறைமுகத்தின் வலது பக்கமாக கரையை கடக்கும்.

    ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

    வலுப்பெற்ற புயல் தீவிர புயலாகவோ, அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்து, அப்புயல் துறைமுகத்தின் இடது பக்கமாக கரையைக் கடக்கும் போது ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு பயன்படுத்தப்படுகிறது.

    5th card

    தொடர்புகள் துண்டிக்கப்படும்போது எந்த புயல் கூண்டு ஏற்றப்படும்?

    பத்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

    அதிதீவிரப்புயல் துறைமுகத்தின் அருகில் கரையை கடக்கும் என கணிக்கப்படும் போது, பத்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. இது ஏற்றப்பட்டால், கரையை கடக்கும் போது துறைமுகங்களுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தும்.

    பதினோராம் புயல் எச்சரிக்கை கூண்டு

    மிக தீவிர புயலுக்கு இக்கூண்டு ஏற்றப்படுகிறது. வானிலை ஆய்வு மையத்தோடு தகவல் துண்டிக்கப்படும்போது இக்கூண்டு ஏற்றப்படுகிறது. இதனால் பலத்த சேதம் ஏற்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புயல் எச்சரிக்கை
    வானிலை அறிக்கை
    வானிலை ஆய்வு மையம்
    வானிலை எச்சரிக்கை

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    புயல் எச்சரிக்கை

    அமெரிக்காவைப் புரட்டி போடும் பனிப்புயல்! என்ன நடக்கிறது அங்கே? அமெரிக்கா
    வங்கக்கடலில் வரும் 6ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை
    தமிழகத்தினை வெளுக்க வருகிறது மோக்கா புயல் - வானிலை அறிக்கை  தமிழ்நாடு
    உருவாகும் புயல் - 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  தமிழ்நாடு

    வானிலை அறிக்கை

    13 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    11 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    அக்டோபர் 17ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    18 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை  தமிழ்நாடு

    வானிலை ஆய்வு மையம்

    தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நவம்பர் 15ல் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு வானிலை அறிக்கை
    தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    7 தமிழக மாவட்டங்களில் அதிகமான கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்

    வானிலை எச்சரிக்கை

    15 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    11 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை தமிழ்நாடு
    தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை: தேஜ் புயல் வலுப்பெற்றது: இன்றைய வானிலை நிலவரம்  தமிழகம்
    அரபிக்கடலில் 'தேஜ்', வங்காள விரிகுடாவில் 'ஹமூன்': இரட்டை புயல்களை எதிர்கொள்ள இருக்கும் இந்தியா வானிலை எச்சரிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025