
ஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்: சந்தேஷ்காலி வழக்கில் மேற்கு வங்காளத்திற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
செய்தி முன்னோட்டம்
சந்தேஷ்காலியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், நிலத்தை அபகரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்காள அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் உயர் நீதிமன்றம் கண்டித்தது.
இந்த சம்பவங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
"நான்காண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் நடந்த சம்பவங்கள் மாநில காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த புகார்கள், 42 குற்றப்பத்திரிகைகளாக பதிவாக நான்கு ஆண்டுகள் பிடித்துள்ளது என்பது ஆச்சரியமளிக்கிறது" என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.
சந்தேஷ்காலி
கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்
கொல்கத்தா உயர் நீதிமன்றம் தொடர்ந்து,"கைதுக்கு இடைக்காலத் தடை விதித்தது போல் தவறான எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு தடை இருப்பதாகக் கூறுவதற்கு என சான்றும், பதிவும் இங்கே இல்லை. எனவே அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
"மக்கள் கொந்தளிக்கும் போது, நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு செல்வதன் அவசியம் என்ன?" என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி, அடுத்த விசாரணை மார்ச் 4ம் தேதி தொடரும் என கூறி வழக்கை ஒத்திவைத்து.
இந்த மாத தொடக்கத்தில் திரிணாமுல் தலைவர் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு தொடர்பாக பல பெண்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, சந்தேஷ்காலியில் போராட்டம் வெடித்தது.