Page Loader
தமிழகத்தில் தொடர் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது

தமிழகத்தில் தொடர் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

எழுதியவர் Sindhuja SM
May 03, 2023
06:00 pm

செய்தி முன்னோட்டம்

தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. மே-3 இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மிக அதிகமாக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்--கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்--இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, நாகபட்டினம்,திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை மே-4 மற்றும் மே-5 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மே-6 மற்றும் மே-7 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள் ஹைலைட் செய்யப்பட்டுள்ளது