13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழக வானிலை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை-2 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி, கோவை, புதுச்சேரி காஞ்சிபுரம் ஜூலை-3 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- நீலகிரி, கோவை
கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களின் பட்டியல்
ஜூலை-3 கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஜூலை-4 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- நீலகிரி, கோவை, தேனி கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- திருப்பூர்,திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி ஜூலை-5 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- நீலகிரி, கோவை கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி