Page Loader
தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு 

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு 

எழுதியவர் Sindhuja SM
May 26, 2024
04:15 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று காலை(25-05-2024) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று மாலை 05:30 மணி அளவில் 'ரீமல்" புயலாக வலுப்பெற்றது. இதன் காரணமாக, மே 26 மற்றும் மே 27 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 28 முதல் மே 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 தமிழகம் 

மே 31 முதல் மே 30 வரை

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-39 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-39 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.