Page Loader
3 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

3 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

எழுதியவர் Sindhuja SM
May 25, 2024
05:20 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 05:30 மணி அளவில் வலுப்பெற்றது. இதன் காரணமாக, மே 25 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 26 முதல் மே 31 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 தமிழகம் 

சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-39 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-39 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.