Page Loader
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு 

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு 

எழுதியவர் Sindhuja SM
Jul 22, 2024
07:13 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம்: ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்திஸ்கர் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. அதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், ஜூலை 22 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். ஜூலை 23 மற்றும் ஜூலை 24 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 25 முதல் ஜூலை 28 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம் 

சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.