Page Loader
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

எழுதியவர் Sindhuja SM
Jan 20, 2024
06:03 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 20 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கடற்கரை பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தின் ஓரிரு பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும். ஜனவரி 21 தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

டக்லன்வெ 

ஜனவரி 22 முதல் ஜனவரி 26 வரை 

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 - 21 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 - 21 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.