LOADING...
யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு; டெல்லியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
யமுனா நதி கரைகளை உடைத்ததால் வெள்ள அபாயம் அதிகரித்தது

யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு; டெல்லியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 02, 2025
09:43 am

செய்தி முன்னோட்டம்

செவ்வாய்க்கிழமை டெல்லியில் யமுனா பஜாரில் யமுனா நதி கரைகளை உடைத்ததால் வெள்ள அபாயம் அதிகரித்தது. குடியிருப்பு காலனிகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். காலை 6 மணியளவில், ஆற்றின் நீர்மட்டம் 205.68 மீட்டராக பதிவாகியுள்ளது - இது 205.33 மீட்டராக இருந்த அபாயக் குறியை விட அதிகமாகும். மாலை 5 மணிக்குள் நீர்மட்டம் 206.50 மீட்டராக உயரக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். ஹரியானாவில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து ஒவ்வொரு மணி நேரமும் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, இதனால் தலைநகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது. இந்த பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வானிலை

இன்று மித மழை பெய்யும் என கணிப்பு 

இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை டெல்லியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சுமார் 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குருகிராமில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. குருகிராமில் திங்கட்கிழமை பெய்த கனமழையால் நகரம் முழுவதும் கடுமையான தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை, நகரில் 100 மிமீக்கு மேல் மழை பெய்தது. இன்று, செப்டம்பர் 2ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என அதிகாரிகள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தனர்.