பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புத்தூர் அருகே உலகளவில் பிரசித்திப்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு செப்டம்பர்.,18ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதையொட்டி இன்று(செப்.,10)காலை கொடியேற்றத்துடன் விநாயகர் சதுர்த்தி திருவிழா துவங்கியது. இதனைத்தொடர்ந்து இன்று இரவு கற்பக விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருவார் என்று கூறப்படுகிறது. விழாவின் 9ம் நாளான 18ம் தேதி ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் செய்யப்படும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் அருள்பாலிப்பார். அன்று மாலை 4 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கவுள்ளது. தொடர்ந்து 10ம் நாளான செப்.,19ம் தேதி காலை கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.