செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி; தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வருகிற செப்டம்பர் 07ம் தேதியன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து, சென்னை காவல் ஆணையாளர் அருண் வெளியிட்ட உத்தரவின் பேரில், சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, வழிபாடு செய்வது குறித்தும் மற்றும் விநாயகர் சிலைகளை அமைதியான முறையில் கடலில் கரைப்பது குறித்தும் குறித்து அதிகாரிகள் மற்றும் விழா அமைப்பினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நகரம் முழுவதும் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டது.
வழிகாட்டு நெறிமுறைகள்
சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து உரிய அனுமதி பெற வேண்டும். சிலை அமைக்கும் முன்னர், தீயணைப்புத்துறை, மின்வாரியம், ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்பை உறுதிப்படுத்த 2 தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும் விழா நிகழ்விற்கு அருகே எந்தவித அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்களுக்கு ஆதரவான பேனர்கள் வைக்க கூடாது சிலைகளை பிற மத வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகே நிறுவக்கூடாது சிலைகள் வைக்கப்படும் இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி இல்லை, கோஷங்கள் எழுப்ப கூடாது