
நாளை தமன் இசையில், விவேக் வரிகளில் தவெக கட்சியின் கொடியும், பாடலும் அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை கட்சியின் X தளத்தின் மூலம் அறிவித்துள்ளார் விஜய்.
இந்த அறிவிப்பில் நாளை காலை 9:15 மணியளவில் கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் கட்சியின் கொடியும், பாடலும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக செய்திகளின்படி, தவெக கட்சியின் பாடலுக்கு மெட்டமைத்திருப்பது இசையமைப்பாளர் தமன். பாடல் வரிகளை எழுதியவர் பாடலாசிரியர் விவேக்.
இந்த நிகழ்விற்காக, பனையூர் கட்சி அலுவலகத்தில் 500 நாற்காலிகள் போடப்பட்டு, பிரம்மாண்ட LED திரை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தள்ளுமுள்ளு ஏற்படுவதை தவிர்க்க துபாயில் இருந்து 20க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING || தமிழக வெற்றிக் கழகத்திற்காக பிரத்யேக பாடல்கள்
— Thanthi TV (@ThanthiTV) August 21, 2024
கவிஞர் விவேக் வரியில், இசையமைப்பாளர் தமன் இசையில் முழு வீச்சில் தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பாடல்கள்
"கட்சிக்கான பாடல்களை, வெளியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை" - தவெக வட்டாரம்
நாளை தமிழக… pic.twitter.com/k46X5xz5lG