
தவெக கொடி விவகாரம்: புகாருக்கு பதிலளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம்
செய்தி முன்னோட்டம்
அரசியலில் நுழைந்த நடிகர் விஜய் தனது தமிழக வெற்றி கழக கட்சியின் கொடியையும், பாடலையும் சென்ற மாதம் வெளியிட்டார்.
அந்த கொடியில் ஒரு வாகை மலரும் அதன் இருபக்கமும் இரண்டு யானைகள் நிற்பது போன்றும் வடிவமைக்கபட்டிருந்தது.
கொடி வெளியான சில மணி நேரத்திலேயே இது தங்கள் கட்சியின் கட்சியின் சின்னத்தையும், கொடியையும் ஒத்திருக்கிறது என பகுஜன் சமாஜ் கட்சி கண்டனம் தெரிவித்தது.
பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமும் யானை தான்.
இதன் தொடர்ச்சியாக, தவெக தேர்தல் விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர் பகுஜன் சமாஜ் கட்சியினர்.
பதில்
தேர்தல் ஆணையம் பதில்
இதற்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட பதிலில் கூறியுள்ளதாவது,"இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யபப்ட்ட தமிழக வெற்றிக்கழகம் தற்காலிக சின்னம் (Free symbol list) கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு தான் ஒரு கட்சி விண்ணபித்து சின்னத்தை பெற முடியும். ஒரு கட்சியின் கொடிக்கு நாங்கள் ஒப்புதல், அங்கீகாரம் வழங்குவது இல்லை. கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது".
"ஒரு கட்சிக்கு கொடி இருக்கிறது என்றால் அந்த கட்சி தான் பொறுப்பு. மற்ற கட்சிகளின் சின்னத்தை விதிமீறாமல் கொடி இருக்க வேண்டும். இது தொடர்பாக வந்த மனுவில் இந்த கட்சி கொடியானது வேறு ஒரு கட்சி கொடி போல் இல்லை" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
தவெக கொடி விவகாரம்
#BREAKING | தவெக கொடி - தேர்தல் ஆணையம் பதில் #Vijay | #TVK | #TVKFlag | #ElectionCommission pic.twitter.com/o7zjqrA3Ub
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) September 30, 2024