தவெகவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்தது; இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் ஆதரவு
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியலில் நீடித்து வந்த இழுபறியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. முன்னதாக, தேர்தலில் 108 இடங்களை வென்ற தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்க போதிய பலத்தை பெறவில்லை. இதையடுத்து காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையில், நேற்று (மே 8) இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. விடுதலை சிறுத்தைகளின் நிலை தொடர்ந்து இழுபறியாக இருந்து வந்த நிலையில், தற்போது விஜய்க்கு ஆதரவளிப்பதாக கடிதம் கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் ஆதரவு அளிப்பதாக அறிவித்து கடிதம் கொடுத்துள்ளது. இதன் மூலம் 120 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் விஜய் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Tamil Nadu | VCK president Thol. Thirumavalavan gives the official confirmation letter to Aadhav Arjuna - TVK General Secretary - Election Campaign Management, extending their support to TVK to form a government in the state.
— ANI (@ANI) May 9, 2026
(Pic: TVK) pic.twitter.com/A60i3uJ0f2
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustNow || த.வெ.க.வுக்கு ஐ.யூ.எம்.எல் ஆதரவு... அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறார் விஜய்#TVK | #TVKVijay | #IUML | #Politics | #PolimerNews pic.twitter.com/6GPPDL53ja
— Polimer News (@polimernews) May 9, 2026