
ஆக்ராவில் பெய்த மழை எதிரொலி: தாஜ்மஹாலில் விழுந்த விரிசல்கள்
செய்தி முன்னோட்டம்
ஆக்ராவில் இடைவிடாது பெய்த மழைக்கு பின்னர் அங்கிருக்கும் தேசிய நினைவு சின்னமான தாஜ்மஹாலில் பல விரிசல்கள் காணப்பட்டன.
இந்தியா டுடே செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ள வீடியோவில் அதில் காணப்பட்ட விரிசல்களின் நிலைமை வெளிவந்துள்ளது.
தாஜ்மஹாலின் சுவர்கள், தரை மற்றும் பிற முக்கிய பகுதிகளில் விரிசல்களைக் காட்டியது. மற்றொரு வீடியோவில், தாஜ்மஹாலின் சுவற்றில் இருந்து ஒரு செடி முளைத்துள்ளது.
இது குறித்து பேசிய இந்திய தொல்லியல் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு நினைவுச்சின்னத்தின் மூலைகளிலும் செடிகள் வளரும் என்றும், எட்டு முதல் பத்து நாட்களுக்குள் அவை "வேர் கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகள்" மூலம் முறையாக அகற்றப்படும் என்றும் கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Plant grows on Taj dome! Marble cracked, walls damaged. @AbshkMishra gets us more details. #Taj #TajMahal #ITVideo #FirstUp | @AishPaliwal pic.twitter.com/YvCAPxHNQt
— IndiaToday (@IndiaToday) September 20, 2024