Page Loader
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா மும்பையில் காலமானார்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா மும்பையில் காலமானார்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 10, 2024
12:14 am

செய்தி முன்னோட்டம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா மும்பையில் புதன்கிழமை (அக்டோபர் 9)அன்று காலமானார். அவருக்கு வயது 86. முன்னதாக மும்பை மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் புதன் இரவு கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது. செயற்கை சுவாசம் தரப்பட்டதாகவும், ICUவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. முன்னதாக 2 நாட்களுக்கு முன்னரும், அவரது உடல்நிலை பற்றிய வதந்திகளுக்கு பதிலளித்த ரத்தன் டாடா, தனது வயது மற்றும் தொடர்புடைய மருத்துவ நிலைமைகள் காரணமாக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

embed

ஆனந்த் மஹிந்திரா இரங்கல்

Ratan Tata passes away at 86. "You will not be forgotten. Because Legends never die...," tweets @anandmahindra.#TNCards #RatanTata pic.twitter.com/Pf04GuxIho— TIMES NOW (@TimesNow) October 9, 2024

பயணம்

தொழிலதிபராக ரத்தன் டாடாவின் பயணம்

ரத்தன் டாடா 1991ஆம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் டாடா குழுமத்தின் தலைவராக ஆனார். அவர் 1996ஆம் ஆண்டில் தொலைத்தொடர்பு நிறுவனமான டாடா டெலிசர்வீசஸை நிறுவினார், 2004ஆம் ஆண்டில் ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸை பொதுவில் எடுத்தார். 2004ஆம் ஆண்டில், டாடா குழுமம், ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் போன்ற புகழ்பெற்ற பிரிட்டிஷ் கார் பிராண்டுகளை வாங்கியதன் மூளையாக ரத்தன் டாடா இருந்துள்ளார். 2009ஆம் ஆண்டில், டாடா நானோ- ₹ 1 லட்சம் விலையில் உலகின் மிக மலிவான காரை நடுத்தர வர்க்கத்தினருக்குக் கிடைக்கச் செய்வதாக ரத்தன் டாடா தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். ரத்தன் டாடா 1991-2012 வரை மற்றும் 2016-2017 வரை டாடா குழுமக் குழுமத்தின் தலைவராக இருந்தார்.