தேர்தல் 2024: விசிக தலைவர் தொல். திருமா சிதம்பரத்தில் போட்டியிடுகிறார்
செய்தி முன்னோட்டம்
மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் இணைந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதில், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விசிக தலைவர் தொல். திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் போட்டியிடவுள்ளனர்.
இது பற்றி அதிகாரபூர்வமாக திருமாவளவன் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் இதுவரை 5 முறை போட்டியிட்டுள்ளார். அதில் 4 முறை தோல்வியும், ஒருமுறை வெற்றியும் பெற்றுள்ளார்.
தற்போது 6-வது முறையாக மீண்டும் சிதம்பரத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ரவிக்குமார் 2-வது முறையாக விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னதாக நேற்று திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட திருச்சி தொகுதியில் துறை வைகோ போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
தொல். திருமா சிதம்பரத்தில் போட்டியிடுகிறார்
#BREAKING | மக்களவைத் தேர்தல் 2024 - திமுக கூட்டணியில் விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு
— Sun News (@sunnewstamil) March 19, 2024
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் ஆகியோர் மீண்டும் போட்டியிடவுள்ளனர்#SunNews | #ElectionsWithSunNews | #DMKAlliance | #INDIA | @thirumaofficial |… pic.twitter.com/yjKkLDX1OM
ட்விட்டர் அஞ்சல்
தொல். திருமா சிதம்பரத்தில் போட்டியிடுகிறார்
#Watch | மக்களவைத் தேர்தல்: திமுக கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு!
— Sun News (@sunnewstamil) March 19, 2024
சிதம்பரம் தொகுதியில் 6வது முறையாக போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன்..!#SunNews | #LokSabhaPolls | #VCK | #DMK | @thirumaofficial pic.twitter.com/WFVjaADkCE