கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வழித்தடம்!
கேரளாவின் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் சேவை ஆனது கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூர் வரை இயக்கப்படுவதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், கேரளாவின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மேலும் காசர்கோடு வரை இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். அதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை இயக்கப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவிக்கையில், கேரளாவில் இரண்டு கட்டங்களாக தண்டவாளங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக காசர்கோடு, திருவனந்தபுரம் முமு பாதை 110 கிமீ வேகத்திற்கு மாற்ற ரூ.381 கோடி ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார்.