
கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
செய்தி முன்னோட்டம்
இந்தியா முழுவதும் அதிவேக வந்தே பாரத் ரயில் சேவைகளை இயக்க ரெயில்வே துறை அறிமுகம் செய்து வருகின்றனர்.
அதன்படி, கேரளா திருவனந்தபுரத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் கண்ணூர் வரை இயக்கப்பட உள்ளது.
8 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயிலை ஏப்ரல் 25-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இதற்கான டிக்கெட் விலை ரூ, 1354 இல் இருந்து எக்சிகியூட்டிவ் கோச் கட்டணம் ரூ.2238 ஆக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
வந்தே பாரத் ரயில் சேவை
திருவனந்தபுரம்- கண்ணூர் வந்தே பாரத் ரயில் சேவை - 25ம் தேதி தொடக்கம்
மேலும் திருவனந்தபுரம்- கண்ணூர் இடையேயான வந்தே பாரத் சோதனை ஓட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது.
இதற்கான பெட்டிகளை சென்னை பெரம்பூரில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்கின்றனர்.
கேரளா சென்றபின் சோதனை ஓட்டம் செய்யப்படும். இதுமட்டுமின்றி கேரளாவில் ரயில் பாதைகள் அதிகமாக வளைவுகளுடன் காணப்படுவதால் ரயில்களை இயக்க சிரமமாக இருக்கு என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால், ரயில் பாதைகளை நேராக அமைக்கவும் ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. பாதை சீரமைக்கப்பட்ட பின் இங்கு ஓடும் ரயில்கள் வேகம் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.