
சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தம், ஏன்?
செய்தி முன்னோட்டம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில், சில்க்யாரா சுரங்கப்பாதை இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியானது 14வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிலத்தடி நிபுணரான பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் செய்தியாளுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
அதில், துளையிடுவதற்குப் பயன்படுத்தி வந்த ஆகர் (Auger) இயந்திரத்தால் துளையிட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்தப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர்.
மேலும், "சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 பேரையும், யாருக்கும் காயம் ஏற்படாமல் பத்திரமாக மீட்பதற்கான பல்வேறு வழிகளையும் பரிசீலனை செய்து வருகிறோம். கிறுஸ்துமஸ் பண்டிகைக்குள் அனைவரும் நலமாக வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு எனக்கு இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார் அவர்.
ட்விட்டர் அஞ்சல்
துளையிடும் பணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அர்னால்ட் டிக்ஸ்:
VIDEO | "The drilling, augering has stopped. It's too much for the auger (machine), it is not going to do anything more. We are looking at multiple options, but with each option we are considering how do we make sure that 41 men come home safe and we don't hurt anyone. The… pic.twitter.com/tFvg0hCemb
— Press Trust of India (@PTI_News) November 25, 2023
ட்விட்டர் அஞ்சல்
பழுதடைந்த நிலையில் துளையிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கருவி:
#WATCH | Damaged blades of the auger drilling machine brought out of Uttarkashi's Silkyara tunnel, where operation is underway to rescue 41 trapped workers pic.twitter.com/OZe8TE9C0G
— ANI (@ANI) November 25, 2023