உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்கள் எப்போது மீட்கப்படுவர்?
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதை கடந்த நவம்பர் 12 ஆம் தேதி இடிந்து விழுந்ததையடுத்து, 41 தொழிலாளர்கள் அந்த சுரங்கபாதையில் சிக்கி கொண்டனர். அதனை தெடர்ந்து, 10 நாட்களுக்கும் மேலாக அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், இன்னும் அவர்கள் மீட்கப்படவில்லை. முதல் 5 நாட்கள் நடந்த துளையிடும் பணிகளின் போது, சுரங்கப்பாதை மீண்டும் மீண்டும் சரிந்து விழுந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை ட்ரில்லிங் பணிகள் மொத்தமாக நிறுத்தப்பட்ட நிலையில், அது நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது, சுரங்கபாதையின் இரண்டு நுழைவு வாயில்களில் இருந்தும், உச்சியில் இருந்தும் துளையிடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிய இன்னும் பல நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
தற்போது என்ன மீட்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது?
அது வரை, சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு தேவையான பொருட்கள் ஒரு குழாய் மூலம் அனுப்பப்படும். 41 தொழிலாளர்களை மீட்க 5 விருப்பங்கள் கொண்ட செயல் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்(ONGC), சட்லுஜ் ஜல் வித்யுத் நிகம்(SJVNL), ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்(RVNL), தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு(NHIDCL) ஆகிய ஐந்து ஏஜென்சிகள் இந்த திட்டங்களை செயற்படுத்தி வருகின்றன. NHIDCL, 60-70 மீ நீளமும் 900 மீ அகலமும் கொண்ட முதல் வெளியேற்ற சுரங்கப்பாதையில் பணியைத் தொடங்கியுள்ளது. RVNL அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக மற்றொரு செங்குத்து பைப்லைனை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. THDC, சுரங்கப்பாதையின் பார்கோட் முனையிலிருந்து மைக்ரோடன்னல் பணியைத் தொடங்கி இருக்கிறது.