NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 400 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்தியாவின் மிகப்பெரும் மீட்பு பணி எப்படி சாத்தியமானது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    400 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்தியாவின் மிகப்பெரும் மீட்பு பணி எப்படி சாத்தியமானது?
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையின் மீட்புப் பணி முடிவடைய 400 மணிநேரம் ஆனது.

    400 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்தியாவின் மிகப்பெரும் மீட்பு பணி எப்படி சாத்தியமானது?

    எழுதியவர் Sindhuja SM
    Nov 29, 2023
    12:41 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த நவம்பர் 12ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

    அந்த சமயத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் அந்த சுரங்கப்பாதைக்குள்ளேயே சிக்கி கொண்டனர்.

    அப்போதிலிருந்து 17 நாட்களாக தொடர்ந்து அவர்களை மீட்க மீட்பு பணிகள் நடந்து வந்தது.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

    தக்ஜவா

    652 அரசு ஊழியர்களின் அயராத உழைப்பு 

    17 நாட்கள், அதாவது 400 மணி நேரம் நீடித்த இந்தியாவின் மிகப்பெரும் மீட்புப் பணியில் குறைந்தது 652 அரசு ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    அதில் காவல் துறையைச் சேர்ந்த 189 பேர், சுகாதாரத் துறையைச் சேர்ந்த 106 பேர், இந்தோ திபெத்திய எல்லைக் காவல் துறையைச் சேர்ந்த 77 பேர், தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 62 பேர், மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 39 பேர், ஜல் சன்ஸ்தான் உத்தர்காஷியை சேர்ந்த 46 பேர், மின்சாரத் துறையைச் சேர்ந்த 32 பேர் மற்றும் எல்லைச் சாலைகள் அமைப்பை சேர்ந்த 38 பேர் ஆகியோர் அடங்குவர்.

    அதுபோக, கடைசி நாளான நேற்று 24 எலி சுரங்கத் தொழிலாளர்களும் மீட்பு பணியில் இணைந்தனர்.

    டவ்கில்ஜி

    எதிர்பார்புகளை மிஞ்சிய எலி சுரங்கத் தொழிலாளர்களின் சேவை 

    16 நாட்கள் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வந்த போதிலும், ட்ரில்லிங் இயந்திரங்களால் போடப்பட்ட துளைகள் தொடர்ந்து இடிந்து விழுந்ததால், சிக்கியிருந்த தொழிலாளர்களை காப்பாற்ற இன்னும் பல நாட்கள் ஆகலாம் என்று கூறப்பட்டது.

    இந்நிலையில், 16வது நாள் மீட்பு பணியில் சேர்ந்த எலி சுரங்கத் தொழிலாளர்கள் 24 மணிநேரத்திற்குள் 12மீ துளையை வேகமாக தோண்டி மீட்பு பணியை வெற்றிகரமாக முடித்தனர்.

    இது குறித்து பேசி இருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல்(ஓய்வு) சையத் அட்டா ஹஸ்னைன், "அவர்கள் 18/20 மணிநேரத்தில் இரண்டு-மூன்று மீட்டர்கள் என்ற விகிதத்தில் முன்னேறுவார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர்கள் 18 மணிநேரத்திற்குள் 10மீ குழியை தோண்டி எங்கள் எதிர்பார்புகளை மிஞ்சியுள்ளனர்." என்று கூறியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    தொழிலாளர்கள் மீட்கப்படும் காட்சி 

    All 41 workers trapped inside the Silkyara-Barkot tunnel in Uttarakhand's #Uttarkashi have been rescued after 17 days.#UttarakhandTunnel #UttarkashiRescue#UttarakhandTunnelRescue#absoluteindianews pic.twitter.com/IbZBctyJeT

    — Absolute India News (@AbsoluteIndNews) November 28, 2023

    தக்ஜவா

    மீட்பு பணி 400 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையின் மீட்புப் பணி முடிவடைய 400 மணிநேரம் ஆனது.

    அதுவரை, அங்கு சிக்கியிருந்த தொழிலாளர்களுக்கு ஒரு குழாயின் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டன.

    கடந்த சனிக்கிழமை, 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத உபகரணம் பழுதாகி உடைந்துவிட்டது.

    சில்க்யாரா சுரங்கப்பாதையின் இடிபாடுகளுக்குள் துளையிட்டுக் கொண்டிருந்தபோது, அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆஜர் இயந்திரத்தின் பிளேடுகள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டன.

    அதனை தொடர்ந்து தான், எலி துளை தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர்.

    சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸும் இந்த மீட்பு பணியில் உதவுவதற்காக வரவழைக்கப்பட்டார். அதனால் இந்த சம்பவம் சர்வதேச அளவில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உத்தரகாண்ட்
    அமெரிக்கா

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    இந்தியா

    இந்தியாவில் வெளியாகும் லோட்டஸ் நிறுவனத்தின் இரண்டாவது கார், எமைரா! ஆட்டோமொபைல்
    இந்தியாவில் கேமிங் மீது மாறி வரும் மனநிலை, புதிய ஆய்வு முடிவு கேம்ஸ்
    டிசம்பர் 1 முதல் இந்தியர்களுக்கு இலவச விசாவை அறிவித்தது மலேசியா மலேசியா
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இன்று தொடங்குகிறது கைகளால் துளையிடும் பணி உத்தரகாண்ட்

    உத்தரகாண்ட்

    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை  கனமழை
    கன்வார் யாத்திரை: ஹரித்வாரில் 30,000 டன் குப்பைகள் குவிந்துள்ளன இந்தியா
    உத்தரகாண்ட்: மின்மாற்றி வெடித்ததால் ஒரே நேரத்தில் 15 பேர் பலி காவல்துறை

    அமெரிக்கா

    நீதிபதிகளுக்கான நெறிமுறைக் குறியீட்டு விதிகளை வெளியிட்டது அமெரிக்க உச்ச நீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    உலகின் இரண்டாவது அதிக விலையுயர்ந்த 1962 மாடல் ஃபெராரி கார் கார்
    உலக நீரிழிவு நோய் தினம்- காலனி ஆதிக்கத்திற்கும், இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதற்கும் என்ன தொடர்பு? இந்தியா
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025