NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை 
    கங்கையின் நீர்மட்டம் 463.20 மீட்டராக உயர்ந்துள்ளது

    உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 17, 2023
    10:13 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று(ஜூலை 17) கனமழை பெய்ததால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து,பல்வேறு சாலைகள் தடைப்பட்டன.

    கங்கை தேவ்பிரயாக் ஆற்றின் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டி உயர்ந்தது.

    மேலும், அலக்நந்தா ஆற்றின் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஹரித்வாரில் நீர்மட்டம் எச்சரிக்கை அளவை தாண்டியுள்ளது.

    அதே போல், கங்கையின் நீர்மட்டம் 463.20 மீட்டராக உயர்ந்துள்ளது.

    இதனையடுத்து, சங்கம் காட், ராம்குண்ட், தனேஷ்வர் காட் மற்றும் ஃபுலாடி காட் ஆகிய இடங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

    அலக்நந்தா ஆற்றில் கட்டப்பட்டுள்ள ஜி.வி.கே நீர்மின்சார திட்டத்தின் அணையில் இருந்து 2,000-3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டதை அடுத்து, கங்கை நதியின் நீர்மட்டம் மேலும் உயர்ந்தது.

    சஜிகிவ்

     13 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 

    ஆற்றங்கரையில் இருக்கும் மக்கள் வெளியேறுமாறு மாவட்ட நிர்வாகம் அடிக்கடி அழைப்பு விடுத்து வருவதாக தெஹ்ரி மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி பிரிஜேஷ் பட் கூறியுள்ளார்.

    ரிஷிகேஷ் அருகே இருக்கும் தெஹ்ரியின் முனி கி ரெட்டி பகுதியில் உள்ள கங்கையின் நீர்மட்டம் 339.60 மீட்டராக அதிகரித்துள்ளது. இது எச்சரிக்கை அளவான 339.50-மீட்டரை விட 0.10-மீட்டர் அதிகமாகும்.

    ஹரித்வாரில் நேற்று மாலை, கங்கையின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவான 293-மீட்டரைக் கடந்து 293.15-மீட்டரை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் தாழ்வான பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தேசிய பேரிடர் மீட்புப் படை(NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை(SDRF), ராணுவம் மற்றும் மாநில காவல்துறையின் உதவியுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    கனமழை
    வெள்ளம்
    நிலச்சரிவு

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கினாலும் மிட்செல் ஸ்டார்க் வரமாட்டார் என இதர தகவல்; ஆஸ்திரேலிய வீரர்களும் தவிர்க்க வாய்ப்பு ஐபிஎல் 2025
    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    கனமழை

    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை தமிழ்நாடு
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை இந்தியா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு

    வெள்ளம்

    வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி

    நிலச்சரிவு

    ஹிமாச்சல் நிலச்சரிவு: 15-கிமீ டிராபிக் ஜாமால் சுற்றுலா பயணிகள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025