Page Loader
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற பிராத்தனை செய்யும் தமிழ்நாட்டு கிராமம்
அனைவரும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலை எதிர் நோக்கி உள்ளனர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற பிராத்தனை செய்யும் தமிழ்நாட்டு கிராமம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 23, 2024
02:40 pm

செய்தி முன்னோட்டம்

துளசெந்திரபுரம் என்ற தமிழ்நாட்டின் சிறிய கிராமத்தினர் அனைவரும் மிகுந்த நம்பிக்கையுடனும் பிரார்த்தனைகளுடனும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலை எதிர் நோக்கி உள்ளனர். அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தா பாட்டிகளின் பூர்வீக ஊர் என்று அழைக்கப்படும் இந்த கிராமத்தில், கமலா ஹாரிஸ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்திய வம்சாவளி செனட்டரான கமலா ஹாரிஸ், ஜனாதிபதி ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை தனது மறுதேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகியதை அடுத்து, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பைடனால் அங்கீகரிக்கப்பட்ட கமலா ஹாரிஸ், போதுமான ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் அவருக்கு ஒப்புதலையும் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு டு அமெரிக்கா

அமெரிக்காவின் வளர்ச்சிகளை இந்த தமிழ்நாட்டு கிராமம் கவனிக்கிறது

இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸின் முன்னோர்கள், அந்த கிராமத்தில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில் வழிபாடு நடத்துபவர்கள் எனவும் உள்ளூர் வாசிகளின் கூற்று. அதனால், தற்போதைய கிராமவாசிகள் அந்த கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளனர், கமலா ஹாரிஸின் வெற்றிக்காக பிராத்தனை நடத்தியுள்ளனர். உள்ளூர் வாசிகளின் கூற்றை வெளிப்படுத்திய இந்தியா டுடே செய்தி குறிப்பில், கமலா ஹாரிஸ் ஜனாதிபதியானால், தங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்கு அது பங்களிக்கும் அந்த ஊர்வாசிகள் நம்பிக்கை தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது. "கமலா ஹாரிஸ் ஜனாதிபதியானால், அவர் எமது கிராமத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பார்" என ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில், கமலா ஹாரிஸ் இந்தியாவை தனது வாழ்க்கையின் "மிக முக்கியமான" பகுதியாக குறிப்பிட்டு, இந்தியாவுடனான தனது தொடர்பை வலியுறுத்தினார்.