NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திரா, தெலுங்கானா வெள்ள பாதிப்பு; உடனடி நிவாரணமாக ரூ.3,448 கோடி வழங்குவதாக மத்திய அமைச்சர் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திரா, தெலுங்கானா வெள்ள பாதிப்பு; உடனடி நிவாரணமாக ரூ.3,448 கோடி வழங்குவதாக மத்திய அமைச்சர் அறிவிப்பு
    ஆந்திரா, தெலுங்கானாவுக்கு உடனடி நிவாரணமாக ரூ.3,448 கோடி அறிவிப்பு

    ஆந்திரா, தெலுங்கானா வெள்ள பாதிப்பு; உடனடி நிவாரணமாக ரூ.3,448 கோடி வழங்குவதாக மத்திய அமைச்சர் அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 07, 2024
    03:07 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) உறுதியளித்தார்.

    கிருஷ்ணா மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த கேசரப்பள்ளி பகுதியை மாநில அமைச்சர் அச்சன்நாயுடு, பாஜக மாநில தலைவரும் எம்பியுமான டி.புரந்தேஸ்வரி ஆகியோருடன் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பார்வையிட்டார்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் சந்தித்து அமைச்சர் பேசிய நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை அச்சன்நாயுடு, புரந்தேஸ்வரி மற்றும் மாநில வேளாண் துறை அதிகாரிகள் விளக்கினர்.

    தெலுங்கானா

    ஆந்திராவைத் தொடர்ந்து தெலுங்கானாவிற்கும் விசிட்

    ஆந்திராவைத் தொடர்ந்து தெலுங்கானாவிலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட சிவராஜ் சிங் சவுகான், "யாரும் ஏமாற்றமடையத் தேவையில்லை.

    உடனடி உதவிகளை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்றார். தற்போது, ​​மத்திய அரசின் பங்கையும் சேர்த்து, மாநில பேரிடர் நிவாரண நிதியின் (எஸ்டிஆர்எஃப்) கீழ், 3,448 கோடி ரூபாயை உடனடி உதவியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    உடனடி உதவிகளை வழங்கிய பின்னர், அடுத்த பயிருக்கு விவசாயிகளுக்கு உரம் மற்றும் விதைகளை வழங்குவது குறித்து அரசாங்கம் சிந்திக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

    பயிர் சேதத்தை மதிப்பிட்டு உரிய இழப்பீடு மத்திய அரசு வழங்கும் என்றும் அமைச்சர் விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    ஆந்திரா
    தெலுங்கானா
    கனமழை

    சமீபத்திய

    கோடையில் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் அதிகம்; நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை உடல் ஆரோக்கியம்
    நிம்மதியான தூக்கமின்றி தவிக்கிறீர்களா? உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த சில டிப்ஸ் தூக்கம்
    சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்; இந்தியா மற்றும் ஐநா அங்கீகரிக்க கோரிக்கை பலுசிஸ்தான்
    அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் உள்துறை

    மத்திய அரசு

    சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான இரண்டாவது பொதுத்தேர்வு குறித்து மத்திய அரசு பரிசீலனை சிபிஎஸ்இ
    பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி புஜா கேத்கர் மீது யுபிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது ஐஏஎஸ்
    பதவிகாலம் முடியும் முன்னரே UPSC தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா  இந்தியா
    விமானச் செயல்பாடுகள் சீரானது, பேக்லாக் அகற்றப்படுகிறது: மத்திய அரசு விமான சேவைகள்

    ஆந்திரா

    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு  ஜெகன் மோகன் ரெட்டி
    கடன் தொல்லை காரணமாக மனைவி, 2 மகள்களை கொன்று தற்கொலை செய்துகொண்ட நகை தொழிலாளி  கடன்
    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராய்டு சென்னை சூப்பர் கிங்ஸ்
    அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறிய அம்பத்தி ராயுடு  அரசியல் நிகழ்வு

    தெலுங்கானா

    டிசம்பர் 6ம் தேதி நடக்கிறது 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம் காங்கிரஸ்
    ரேவந்த் ரெட்டி தெலுங்கானாவின் அடுத்த முதல்வர் ஆக வாய்ப்பு: யார் இவர்? இந்தியா
    ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; பின்னடைவை சந்தித்த முக்கிய அமைச்சர்கள் யார்? தேர்தல்
    இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் கூட்டம் நாளை கூடுகிறது மல்லிகார்ஜுன் கார்கே

    கனமழை

    தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார் நிர்மலா சீதாராமன்  தூத்துக்குடி
    பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு ஒத்திவைக்கப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ்  பள்ளிக்கல்வித்துறை
    தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை தமிழ்நாடு
    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மருத்துவமனையில் அனுமதி  மருத்துவமனை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025