ஹிந்தியில் தவறாக எழுதிய மத்திய அமைச்சர் சாவித்ரி தாக்கூர்
பத்து நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் பொறுப்பேற்ற ஏழு பெண் அமைச்சர்களில் ஒருவராக சாவித்ரி தாக்கூர் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். இப்போது, மீண்டும் அவர் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஆனால் இம்முறை ஹிந்தியில் தவறாக எழுதியதற்காக. ஹிந்தியில் 'பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ' என்று சரியாக எழுத அமைச்சர் சாவித்ரி தாக்கூர் போராடிய சங்கடமான சூழ்நிலையின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் இப்போது, கலவையான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. மேலும், அவரது கல்வி, சமீபத்திய நியமனம் மற்றும் பொது பிரதிநிதிகளுக்கான தகுதிகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. மோடி அமைச்சரவையில் அவர் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.