2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் குறையும்: ஐநா கணிப்பு
செய்தி முன்னோட்டம்
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள இந்தோ-கங்கைப் படுகையில் உள்ள சில பகுதிகளில் ஏற்கனவே நிலத்தடி நீர் வீழ்ச்சி நிலையை அடைந்துவிட்டன.
மேலும், அந்த படுகையில், வரும் 2025 ஆம் ஆண்டளவில் மிகக் குறைந்த நிலத்தடி நீர் இருப்பையே கொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மேலும், சவுதி அரேபியா போன்ற சில நாடுகளில் ஏற்கனவே நிலத்தடி நீர் அபாய முனையை தாண்டிவிட்டன, அதே நேரத்தில் இந்தியா உட்பட மற்ற நாடுகள் அதிலிருந்து வெகு தொலைவில் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"இணைந்த பேரிடர் அபாய அறிக்கை 2023" என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம் - சுற்றுச்சூழல் மற்றும் மனித பாதுகாப்பு நிறுவனம் (UNU-EHS) இந்த அறிக்கையை வெளியிட்டது.
card 2
வறண்டு போகும் நீர்நிலைகள்
நிலத்தடி நீரில் 70 சதவிகிதம், விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
எனினும் தற்போது நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. குறிப்பாக நீர் நிலைகள்.
வறட்சியால் ஏற்படும் விவசாய இழப்புகளைத் தணிப்பதில், நீர்நிலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆனால், தற்போதுள்ள காலநிலை மாற்றத்தால் இந்த நீர் அதரங்களில் நிலை மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
card 3
பஞ்சாப், ஹரியானா பகுதிகளில் அபாய கட்டத்தை நெருங்கும் நிலத்தடி நீர் அளவு
"அமெரிக்கா மற்றும் சீனாவின் பயன்பாட்டை விட, உலகின் மிகப்பெரிய நிலத்தடி நீரை இந்தியா பயன்படுத்துகிறது. இந்தியாவின் வடமேற்கு பகுதி, நாட்டின் 1.4 பில்லியன் மக்களுக்கு, உணவு உற்பத்தி கூடமாக செயல்படுகிறது. குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் 50 சதவீதம் உணவை உற்பத்தி செய்கின்றன".
"இருப்பினும், பஞ்சாபில் உள்ள 78 சதவீத கிணறுகள், அதிகமாக வறண்டுள்ளதாக கருதப்படுகின்றன. மேலும் ஒட்டுமொத்த வடமேற்குப் பகுதியும், 2025 ஆம் ஆண்டுக்குள் மிகக் குறைந்த நிலத்தடி நீர் இருப்பை அனுபவிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது" என்று அறிக்கை கூறுகிறது.