Page Loader
கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்- யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல்
கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்- யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல்

எழுதியவர் Srinath r
Nov 06, 2023
11:51 am

செய்தி முன்னோட்டம்

கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் நேற்று காலையில் ரிட்டர் அளவுகோலில் 1.9 மற்றும் 2.1 என நிலநடுக்கம் பதிவானதாக, கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கங்களின் அளவு மற்றும் தீவிரம் மிகவும் குறைவாக இருந்ததால், மக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அம்மாநில பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 1.9 ஆக பதிவான முதல் நிலநடுக்கம் அதிகாலை 04:22 மணிக்கு பதிவானது. அதன் மையம் பிதார் மாவட்டம் ஹம்னாபாத் தாலுகாவில் உள்ள வடங்கேரா கிராமத்தில் இருந்து 1.7 கிமீ வடக்கு-வடகிழக்கே இருந்தது. அதே மையப்பகுதியில் காலை 06:04 மணிக்கு ரிக்டர் அளவுகோலில், 2.1 ஆக இரண்டாவது நிலநடுக்கம் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

நேற்றைய நிலநடுக்கம் குறித்த முழு அறிக்கை