LOADING...
தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஒரு வாரத்தில் வெளியிடப்படும்: புஸ்ஸி ஆனந்த்

தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஒரு வாரத்தில் வெளியிடப்படும்: புஸ்ஸி ஆனந்த்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 19, 2024
11:55 am

செய்தி முன்னோட்டம்

கடந்த பிப்ரவரி மாதம் யாரும் எதிர்பார்க்காத அரசியல் என்ட்ரி ஒன்றை அறிவித்தார் நடிகர் விஜய். தமிழக வெற்றி கழகம் என தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்ததோடு மட்டும் இன்றி, அந்த பெயரை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார். அதன் தொடர்ச்சியாக, அடுத்த சட்டமன்ற தேர்தலில் களம் காண்போம் எனவும் அறிவித்தார். அதோடு மக்களையும் நேரில் சந்திக்கும் வழக்கத்தை விஜய் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில், கட்சிக்கான அதிகாரபூர்வ கொடியை ஒரு வாரத்திற்குள் வெளியிட போவதாக விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுவரை விஜயின் முகத்தை கொண்டு மட்டுமே கட்சி கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், கொடியும், சின்னமும் எப்படி இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

தமிழக வெற்றி கழகத்தின் கொடி