TVK விஜய்யின் சென்னை பிரசாரம் திடீர் ரத்து: பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னையில் இன்று நடைபெறவிருந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தத் திடீர் மாற்றம் அரசியல் வட்டாரத்திலும், அக்கட்சியின் தொண்டர்களிடத்திலும் பெரும் அதிர்ச்சியையும் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி, சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் விஜய் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபடவிருந்தார். இதற்காகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கூடிப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கத் தயாராக இருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் இந்தப் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்கள், தேர்தல் ஆணையம் அறிவித்த 1 மணி நேர காலக்கெடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
BREAKING:
— Arun Vijay (@AVinthehousee) April 5, 2026
Due to limited time permissions granted for campaigning, @TVKVijayHQ leader Vijay has cancelled tomorrow’s campaign.
Permission was requested from 11 AM to 1 PM in Villivakkam & from 3 PM to 6 PM in T. Nagar. However, only one hour was granted in each constituency… pic.twitter.com/h6ooY37ohO