
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று மாலை அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இன்று மாலை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
அந்த செயலியில் முதல் உறுப்பினராக விஜய் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகத்தில் தன்னுடைய கட்சியின் செயலியை விஜய் அறிமுகம் செய்வார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கைக்கான நிர்வாகிகள் அணியினை நேற்று அறிவித்தார் விஜய்.
இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற குறிக்கோளுடன் அமைக்கப்பட்ட இந்த அணியை ஒரு பெண் முன்னெடுத்து செல்ல வேண்டும் என விஜய் கட்டாயமாக கூறியதாகவும் கூறப்படுகிறது.
அதோடு வரவுள்ள தேர்தலில், உறுப்பினர்களாக பதியப்பட்ட நபர்கள் வேறு எந்த கட்சிக்காகவும் ப்ரேச்சரம் செய்யக்கூடாது எனவும் கண்டிப்பாக கூறப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி
உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று அறிமுகம் தோழர்களே நம் பலத்தை காட்டுவோம் #தமிழகவெற்றிக்கழகம் #தலைவர்_தளபதிவிஜய் #TamilagaVettriKazhagam @tvkvijayhq @actorvijay @BussyAnand @EcrPSaravanann @LoyolaMani @Bloody_Expiry https://t.co/W4h9k9say0
— kaviyarasan_ TVK (@kaviyarasan18) March 8, 2024