'அனைவரையும் ஒன்றிணைக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்': பீகார் அரசியல் நெருக்கடி குறித்து பேசிய மல்லிகார்ஜுன் கார்கே
செய்தி முன்னோட்டம்
பீகார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் 'இண்டியா' கூட்டணியில் நிலவும் கருத்து வேறுபாடுகளை போக்க காங்கிரஸ் கட்சி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று தெரிவித்தார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியூ) 'இண்டியா' கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து தனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
பீகார் முதல்வர் பதவியில் இருந்து ஜேடியூ மூத்த தலைவர் நிதிஷ் குமார் இன்று ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகவும், அவருடன் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வார்கள் என்றும் 'இந்தியா டுடே' டிவிக்கு நேற்று முன்தினம் தகவல்கள் கிடைத்தது.
பிஜியூலன்
'நிதிஷ் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை': கார்கே
இந்நிலையில், நிதிஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அவரிடம் பேச முயற்சித்ததாகவும் கார்கே தெரிவித்துள்ளார்.
"ஆனால் நிதீஷ் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. நாளை, டெல்லி சென்றால் தான் முழுத் தகவலும் கிடைக்கும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்றும் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார்.
பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) கூட்டணியில் பதற்றம் நிலவி வந்த நிலையில், இந்த வாரம், மத்திய பாஜக அரசு, சோசலிஸ்ட் தலைவர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கியதை அடுத்து, அது மேலும் சூடு பிடித்துள்ளது.