ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னை-போடி ரயில் சேவை துவக்கம்
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள போடிநாயக்கனுர், சுற்றிலும் மலைகளும், டீ எஸ்டேட்களும் நிறைந்த ஊராகும். எனினும் இங்கே பரவலான ரயில் போக்குவரத்து இல்லை. தேனியில் 1909ஆம் ஆண்டு முதன்முதலில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. இருப்பினும் இரண்டாம் உலக போரின் போது ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு, தண்டவாளங்கள் அகற்றப்பட்டது. தொடர்ந்து 1954 முதல் மீட்டர் கேஜ் தண்டவாளத்தில், பாசெஞ்சேர் ரயில்களும், சரக்கு ரயில்களும் மட்டும் இயக்கப்பட்டது. இயங்கி வந்த மீட்டர்கேஜ் ரயில் சேவையும், பராமரிப்பு காரணமாக 2010 முதல் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, ரயில் போக்குவரத்து சேவை விரைவில் துவங்க வேண்டும் என்று உள்ளூர் வாசிகள் கோரிக்கை வைத்தவண்ணம் இருந்தனர்.
சென்னை-போடி ரயில் சேவை
மதுரையிலிருந்து ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் அறிவித்து, அதற்கான சோதனை ஓட்டங்கள் எல்லாம் மேற்கொண்டனர். ஆனாலும், பல காரணங்களால் அது நிறைவேற்றவே இல்லை. இதனிடையே, வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல், மதுரையில் இருந்து போடி வரை இருவழி பாதையாக, முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. அதோடு, அடுத்த நாள், ஜூன் 16-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை முதல், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து போடிநாயக்கனுர் வரை பாசெஞ்சேர் ரயில் சேவையும், சரக்கு ரயில் சேவையும் தொடங்கப்படும் எனவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.