
இன்று முதல் சென்னை தீவுத்திடல் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம் சார்பாக நடத்தப்படும் 'ஆன் ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா-4 ' வரும் டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதற்காக தீவுத்திடலை சுற்றியுள்ள சில சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய, இன்று,(நவம்பர்-17) முதல் டிசம்பர்-1 வரை, இரவு நேரங்களில் தீவுத்திடலை சுற்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த அறிவிப்பின்படி, வார் மெமோரியலில் இருந்து வாலாஜா ரோடு செல்ல அனுமதியில்லை.
மாறாக, வாகனங்கள் ஆர்பிஐ அலுவலக சுரங்க பாதை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.
அதேபோல பல்லவன் சாலை->மன்றோ சிலை வரை, சுவாமி சிவானந்த சாலையிலுள்ள பெரியார் சிலை->நேப்பியர் பாலம் வரை, நேப்பியர் பாலம்->வார் மெமோரியல் வரை, கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
தீவுத்திடல் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
Traffic Diversion at Flag Staff Road from 17.11.2023 to 01.12.2023.
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) November 16, 2023
🏎️Chennai Formula Racing Circuit
from 17.11.2023 to 01.12.2023.#ChennaiFRC #NightRace #F4India #IRL #SpeedCity #Chennai #Traffic @chennaipolice_ pic.twitter.com/UvNiYtBBya