சென்னை கோயம்பேட்டில் தக்காளி வரத்து அதிகரிப்பு - விலையில் வீழ்ச்சி
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதுமே கடந்த ஒரு மாத காலமாக, தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை உயர்ந்தது என்று வியாபாரிகள் கூறினர்.
இதன் காரணமாக இல்லத்தரசிகள், உணவகங்கள் நடத்துபவர்கள் உள்ளிட்டோர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அதனால், தக்காளியினை மக்களுக்கு குறைவான விலையில் விற்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதனிடையே கடந்த சில தினங்களாக தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது என்றும், அதனால் இதன் விலையும் வீழ்ச்சியடைந்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
வரத்து அதிகரிப்பு
தக்காளியின் விலை அதிரடியாக குறைய வாய்ப்பு
இதன்படி இன்றைய நிலவரப்படி, சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், 1 கிலோ தக்காளியின் விலை மொத்த விலைக்கடைகளில் ரூ.60க்கும், சில்லரை கடைகளில் ரூ.70க்கும் விற்பனையானது என கூறப்படுகிறது.
மேலும் நேற்று(ஆகஸ்ட்.,10) தக்காளியின் வரத்து 700 டன் இருந்த நிலையில், இன்று(ஆகஸ்ட்.,11) 50 டன் கூடுதலாக, அதாவது மொத்தம் 750 டன்'ஆக தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதாம்.
இதன் காரணமாக அடுத்து வரும் நாட்களில் தக்காளியின் விலை அதிரடியாக குறைய வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிகிறது.
இந்த தகவல்களை சென்னை கோயம்பேடு மொத்த மற்றும் சிறு காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.