
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு; டிசம்பரில் முதன்மைத் தேர்வு நடக்கும் என அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) திங்கட்கிழமை (செப்டம்பர் 2) வெளியிட்டது.
குரூப் 1 பணிகளில் காலியாக உள்ள 97 இடங்களுக்கு கடந்த ஜூலை 13ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 1.59 லட்சம் பேர் எழுதினர்.
இந்நிலையில், திங்கட்கிழமை இதன் முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வு முடிந்த 50 நாட்களில் முடிவை வெளியிட்டுள்ளது தேர்வர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அடுத்து முதன்மை தேர்வுகள் டிசம்பர் 10-13 வரை சென்னையில் நடைபெறும் என அறிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி, செப்டம்பர் 6 முதல் 15ஆம் தேதி வரை, இதற்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் தேர்வுக் கட்டணத்தை டிஎன்பிஎஸ்சி தளத்தில் செலுத்துமாறு அறிவித்துள்ளது.
குரூப் 1 தேர்வு
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறை
அரசுத் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்தேர்வை நடத்தி வரும் டிஎன்பிஎஸ்சி, சப் கலெக்டர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வை நடத்துகிறது.
குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கும் இந்த தேர்வு மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.
இதில் முதல் கட்டமாக முதல்நிலைத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தகுதி பெறும் அனைவரும் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணலில் பங்கேற்க அனுமதிக்கப்படும்.
முதல்நிலைத் தேர்வு மதிப்பெண்கள் தகுதிக்கானது மட்டுமே. முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணலில் பெரும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி வெளியிடப்படும்.
ட்விட்டர் அஞ்சல்
முதல்நிலைத் தேர்வு முடிவு
Combined Civil Services Examination-I (Group I Services)
— TNPSC (@TNPSC_Office) September 2, 2024
Notification No: 4/2024
Date of Examination: 13.07.2024
Date of Result Declaration: 02.09.2024
Result Declared in 50 Days pic.twitter.com/bGJXlBGBOQ
ட்விட்டர் அஞ்சல்
முதன்மைத் தேர்வு அறிவிப்பு
Combined Civil Services Examination-I (Group-I Services) - Notification No.04/2024 – List for Main Written Examination.
— TNPSC (@TNPSC_Office) September 2, 2024
For details click :- https://t.co/e35btbrsBr pic.twitter.com/Wmu3Wz4xo2