Page Loader
நோ பவர்கட்: பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு
பொதுத்தேர்வு முடியும் வரை தமிழ்நாட்டில் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என உத்தரவு

நோ பவர்கட்: பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 01, 2024
04:38 pm

செய்தி முன்னோட்டம்

இன்று தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு துவங்கி விட்டது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 22-ஆம் தேதி வரையிலும், 11-ஆம் பொதுத்தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி மார்ச் 24-ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக மின்வாரிய துறை அமைச்சர், தங்கம் தென்னரசு, பொதுத்தேர்வு முடியும் வரை தமிழ்நாட்டில் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். அதோடு, துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காகவும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

தமிழக அரசின் உத்தரவு