ரூ.1000-க்கு மேல் மின் கட்டணம் வந்தால் இப்படிதான் செலுத்த வேண்டும்! மின்வாரியம் புதிய நடவடிக்கை
தமிழ்நாடு மின்சார வாரியம் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான மின் கட்டணத்தை இனி கவுண்டரில் செலுத்த முடியாது என புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது. தமிநாட்டு மின்சார வாரியமானது 2 மாதம் ஒரு முறை மின் கட்டணத்தை வசூல் செய்கிறது. ஏற்கனவே ரூ.5,000-க்கு மேல் மின் கட்டணம் செலுத்துவோர் ஆன்லைன் மூலமாக செலுத்தும் முறை உள்ளது. இதற்கும் குறைவான தொகை மட்டுமே கவுண்டரில் செலுத்தும் முறை இருந்து வந்தது. இந்த நிலையில், மின்சார வாரியம் பணிச்சுமையை குறைக்கும் விதமாக கடந்த ஆண்டு கவுண்டரில் செலுத்தும் தொகை 2,000 ரூபாய் ஆக மாற்றப்பட்டது.
ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டுமா? புதிய நடவடிக்கை
இந்த தொகையை மேலும் குறைக்க மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்க, அதன் படி தற்போது ரூ.1,000 ரூபாய்க்கும் குறைவான தொகையை மட்டுமே கவுண்டரில் செலுத்த முடியும் எனக்கூறப்படுகிறது. அதற்கு மேல் உள்ள தொகையை ஆன்லைன் மூலமாக செலுத்த முடிவு செய்ய உள்ளார்களாம். இந்த புதிய முறைக்கு ஆணையம் அனுமதி அளித்தால் நடைமுறைக்கு வரும். ஆனால், தற்போதைய நிலவரப்படி ஒரு வீட்டில் மின் கட்டணம் 372 யூனிட்களை தாண்டினாலே ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வந்துவிடும். இதனால், ஆன்லைன் மூலமாக பணம் செலுத்த நேரிடும். இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை மேலும் அதிகரிக்ககூடும்.