Loading...
ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
இன்று ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 10, 2026
07:52 am

செய்தி முன்னோட்டம்

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், இடி-மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மிதமான மழை

13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை நீடிக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த இரண்டு நாட்கள் தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் காரைக்காலில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் தொடர வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT