Page Loader
தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு: வெளியான அறிவிப்பு
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு:

தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு: வெளியான அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2024
02:07 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையை நீடிப்பதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. எனினும் அந்த வாரத்தின் இறுதி நாட்களை சேர்த்து விடுமுறையை மேலும் நீடித்து அக்டோபர் 6ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது விடுமுறையை நீடித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிப்பின் படி, தற்போது பள்ளிகளின் காலாண்டு விடுமுறை அக்டோபர் 6 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு, அக்டோபர் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும்.

embed

காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

#BREAKING | தமிழ்நாட்டில் அக்., 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்!#SunNews | #SchoolReopen | #TNSchools pic.twitter.com/NaKpKELLqZ— Sun News (@sunnewstamil) September 25, 2024

embed

Twitter Post

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்.6 வரை நீட்டிப்பு; 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளி கல்வித்துறை. #TamilNadu #Schools pic.twitter.com/qklGSSrMhd— Arun (@apcuddalorion) September 25, 2024 தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்.6 வரை நீட்டிப்பு; 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளி கல்வித்துறை. #TamilNadu #Schools pic.twitter.com/qklGSSrMhd— Arun (@apcuddalorion) September 25, 2024