Loading...
தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் ரூ.22.10 கோடி டிஜிட்டல் மோசடி: சர்வதேச சைபர் குற்றவாளிகள் கைவரிசையா?
தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் ரூ.22.10 கோடி டிஜிட்டல் மோசடி

தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் ரூ.22.10 கோடி டிஜிட்டல் மோசடி: சர்வதேச சைபர் குற்றவாளிகள் கைவரிசையா?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 11, 2026
08:01 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையின் ஊராட்சி ஒன்றிய வங்கி கணக்குகளில் இருந்து டிஜிட்டல் முறையில் ரூ.22 கோடியே 10 லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் பிரத்யேக இணையதளப் போர்ட்டலுக்குள் சர்வதேச சைபர் குற்றவாளிகள் சட்டவிரோதமாக ஊடுருவி இந்த மாபெரும் பண மோசடியைச் செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விவரங்கள்

எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பணம் கையாடல்?

மூன்று மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய வங்கிக் கணக்குகளில் இருந்து நிதி மர்மமான முறையில் மாற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் (மண்டபம் ஊராட்சி ஒன்றியம்): ரூ. 14 கோடி

திருப்பூர் மாவட்டம் (தாராபுரம் ஊராட்சி ஒன்றியம்): ரூ. 5 கோடி

நாகப்பட்டினம் மாவட்டம் (நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம்): ரூ. 3 கோடியே 10 லட்சம்

மொத்தம் ரூ. 22.10 கோடி நிதி இணையவழி போர்ட்டல் ஊடுருவல் மூலம் பல்வேறு போலி வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பின்னணி

வெளிநாட்டு சைபர் கும்பல் பின்னணி?

சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் அதிகாரிகளின் மின்னஞ்சல் (E-mail) முகவரிகளை ஆய்வு செய்ததில், வங்கதேசம், அமெரிக்கா மற்றும் கிரீஸ் ஆகிய வெளிநாடுகளில் உள்ள IP முகவரிகளில் இருந்து இந்த ஊடுருவல் சம்பவங்கள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் சர்வதேசச் சைபர் குற்றவாளி கும்பல் இயங்கி வரலாம் என்ற கோணத்தில் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT