திருநெல்வேலியில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை; காரணம் இதோ
செய்தி முன்னோட்டம்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக நாளை நெல்லைக்கு பயணிக்கின்றார்.
நாளை, பிப்ரவரி 6 ஆம் தேதி, கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து, பிப்ரவரி 7 (வெள்ளிக்கிழமை) அன்று பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மார்க்கெட் கட்டிடங்களை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்குவார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு, நெல்லையில் தங்கும் விடுதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
டிரோன்கள் பறக்க தடை, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
முதல்வர் வருகையை ஒட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வாகன தணிக்கைகளில் ஈடுபட்டுள்ள போலீசார், இன்று முதல், நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை வரை, 3 நாட்களுக்கு கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டையை சுற்றி சுமார் 5 கிலோமீட்டர் பகுதியை டிரோன்கள் பறக்க தடை விதித்துள்ளது.
தடையை மீறும் டிரோன்கள் பறக்க விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், நெல்லை மாநகர பகுதியில் இன்று காலை 6 மணி முதல், நாளை மறுநாள் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு சிப்காட் தொழிற்பேட்டையை சுற்றி போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.