
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது
செய்தி முன்னோட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது.
இந்த கூட்டத்தில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்திற்கு ஆளுநரை அழைப்பதா வேண்டாமா என்பது குறித்த பல முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம், வரும் பிப்ரவரி மாதம் 2-வது வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது.
அதனால் தமிழக அரசும் வரும் பிப்ரவரி மாதத்திலேயே தனது 2024-25ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாட்டில் உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
இன்று அமைச்சரவை கூடுகிறது
#BREAKING | இன்று கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை!#SunNews | #TamilNadu | #CabinetMeeting pic.twitter.com/2XGAGQ6XmK
— Sun News (@sunnewstamil) January 23, 2024