
மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், வீடு திரும்பினார்
செய்தி முன்னோட்டம்
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஒரு பிட்னெஸ் ரசிகர் என்பதும் பலரும் அறிந்தது.
ஒரு முறை, முதலமைச்சர் ஸ்டாலின் தனது பேட்டியின் இடையே இதை தெரிவித்திருந்தார். அதாவது, அன்றாடம், முதல்வரும், அமைச்சர் மா.சு -வும் தினசரி காலை நடைப்பயிற்சி மற்றும் ஜாகிங் செல்வோம் எனவும், அப்போது அரசு சம்மந்தமான விஷயங்களை உரையாடிக்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை வழக்கம்போல நடைப்பயிற்சி மேற்கொள்ள சென்ற அமைச்சர் மா.சுப்ரமணியன், திடீரென தலை சுற்றலும், உடல் அசௌகரியமும் ஏற்படவே, உடனே மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லப்பட்டார்.
மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, அவரின் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்ததால் இந்த மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது அவர் இல்லத்தில் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
உடல்நல குறைவு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி
— Oneindia Tamil (@thatsTamil) August 30, 2023
More Details: https://t.co/dRbP1McaPe#masubramanian #ChennaiHospital #HealthMinister #மாசுப்பிரமணியன் pic.twitter.com/JQNwa2BlHV