
'வரலாம் வா வரலாம் வா' - ரிவெர்ஸ் வாக்கிங் செய்யும் அமைச்சர் மா.சுப்ரமணியம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தனது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துபவர்.
உடற்பயிற்சி, நடைபயிற்சி உள்ளிட்டவைகளை தவறாமல் செய்வார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் அமைச்சர் இன்று(அக்.,26)தனது எக்ஸ் தளத்தில் 'ரிவர்ஸ் வாக்கிங்' செய்து வீடியோ ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர் அதில், "வாழ்க்கையில முன்னோக்கி தான் போகணும். ஆனால் வாக்கிங் செய்கையில் பின்னோக்கி போகலாம் தானே" என்றும் பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த வீடியோ பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இதனிடையே, வரும் நவம்பர் 4ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ஹெல்த் வாக் சாலை' திட்டத்தினை துவக்கி வைக்கவுள்ளார் என்று அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
வைரல் வீடியோ
வாழ்க்கையில முன்னோக்கித்தான் போகணும்....
— Subramanian.Ma (@Subramanian_ma) October 26, 2023
WALKING ல பின்னோக்கியும் போகலாம்தானே... pic.twitter.com/bKpHg1kJyn