பாராலிம்பிக்ஸ் போட்டி தொடரில் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டிய கவர்னர் ரவி
பாராலிம்பிக்ஸ் போட்டித்தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித்தொடரில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பல பதக்கங்களை குவித்து வருகின்றனர். சமீபமாக ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர். குறிப்பாக தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலு, கடந்த மூன்று பாராலிம்பிக்ஸ் போட்டிகளிலும் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். அவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டி பதிவு இட்டுள்ளார் . அதே சூழலில் தமிழக ஆளுநர் RN ரவியும், மாரியப்பனை பாராட்டி பதிவு இட்டுள்ளார். அதேபோல முன்தினம் பதக்கங்களை குவித்த வீராங்கனைகளும் பாராட்டி ஆளுநர் ரவி பதிவிட்டுள்ளார்.