2025-ஆம் ஆண்டு இத்தனை நாள் தான் லீவு; பொது விடுமுறை நாட்களை அறிவித்தது தமிழக அரசு
செய்தி முன்னோட்டம்
2025ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில் 2025ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விடுமுறை நாட்கள் 1881ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ், மாநில அரசு அலுவலகங்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கும், அனைத்து வகை வணிக வங்கிகளுக்கு மட்டும் பொருந்தும்.
வெளியான அறிக்கைப்படி 2025ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் எந்தவொரு பொது விடுமுறையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | 2025ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாட்கள் வெளியானது
— Sun News (@sunnewstamil) November 22, 2024
மொத்தம் 24 நாட்கள் பொதுவிடுமுறையாக உள்ளன#SunNews | #GovtHoliday | #TNGovt pic.twitter.com/gjAGmlk9Tg
விடுமுறை நாட்கள்
விடுமுறை நாட்களின் பட்டியல்
2025 ஆம் ஆண்டின் விடுமுறை நாட்கள் மற்றும் முக்கியமான தேதிகள்:
தீபாவளி 2025: அக்டோபர் 20ஆம் தேதி, திங்கட்கிழமை தீபாவளி வருகின்றது.
அதற்கு முந்தைய வார விடுமுறையுடன் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.
ஜனவரி மாதத்தில் அதிகபட்சம் 5 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் தலா 4 விடுமுறை நாட்கள் உள்ளன.
நவம்பர் மாதத்தில் எந்தவொரு பொது விடுமுறை நாட்களும் இல்லை.
இந்த விடுமுறை நாட்கள், குறிப்பாக தீபாவளி மற்றும் மற்ற முக்கிய நாட்கள், தமிழக அரசு அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் விடுமுறைகளுக்கான வழிகாட்டியாக செயல்படும்.